வடமதுரை ஆடித்திருவிழா: முத்துப்பல்லக்கில் வீதியுலா வந்த சௌந்தரராஜ பெருமாள்
சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் சௌந்தரராஜப் பெருமாள், ராஜ அலங்காரத்துடன் முத்துப்பல்லக்கில் எழுந்தருளினார்.;
வடமதுரையில் உள்ள சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆடித் திருவிழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தினமும் பல்வேறு மண்டகப்படிதாரர்களின் சார்பில் கலை நிகழ்ச்சிகளுடன் வாகன வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிம்மம், கருடன், சேசன், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவிழாவின் 11-ம் நாளான நேற்று இரவு, முத்துப்பல்லக்கு ஊர்வலம் நடைபெற்றது. இதையொட்டி பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து சன்னதியில் இருந்து அழைத்து வந்தனர். அதன்பின்னர் பெருமாள் ராஜ அலங்காரத்துடன் முத்துப்பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விடிய விடிய நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வழிநெடுகிலும் காத்திருந்த பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர்.