நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் தங்கத் தேருக்கு தங்க தகடு பதிக்கும் பணி- அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் பி.கே.சேகர்பாபு ஆகியோர் தங்க தகடு பதிப்பதற்காக 9.5 கிலோ தங்கத்தை வழங்கி பணியை தொடங்கி வைத்தனர்.;

Update:2025-08-11 17:42 IST

சென்னை, நங்கநல்லூர் ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் கோவிலில் புதிய தங்கத் தேருக்கு 9.5 கிலோ எடை கொண்ட தங்கத்தை கொண்டு தங்கத் தகடு பதிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இப்பணியை தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.

பின்னர், அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறுகையில், நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு ரூ.8 கோடி மதிப்பில் புதிய தங்கத்தேர் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. புதிய தங்கத்தேருக்கு ரூ.35 லட்சம் மதிப்பில் மரத்தேர் செய்யப்பட்டு, அதற்கு ரூ.12.31 லட்சம் செலவில் செப்புத்தகடு வேயும் பணி நிறைவு பெற்றுள்ளது. தொடர்ந்து உபயதாரர் பங்களிப்போடு 9 கிலோ 500 கிராம் எடை கொண்ட தங்கத்தை கொண்டு தங்க தகடு பதிக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது” என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்