திருப்பதி: விகனச மகரிஷி சன்னதியில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி

திருப்பதி ஏழுமலையான் கோவில் வடக்கு மாடவீதியில் விகனச மகரிஷிக்கு தனியாக சன்னதி உள்ளது.;

Update:2025-08-11 12:00 IST

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகானச ஆகமத்தின் படி நித்ய கைங்கர்யங்கள், சேவைகள், உற்சவங்கள் நடத்தப்படுகின்றன. இந்த வைகானச ஆகமத்தை விகனச மகரிஷி இயற்றினார். அவருக்கு ஏழுமலையான் கோவில் வடக்கு மாடவீதியில் தனியாக சன்னதி உள்ளது. அங்கு, ஆண்டு தோறும் சிரவண பவுர்ணமியையொட்டி விகனச மகரிஷி ஜெயந்தி உற்சவம் நடத்தப்படும். மறுநாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி திருச்சி வாகனத்தில் ஊர்வலமாக சென்று விகனச மகரிஷி சன்னதியில் எழுந்தருள்வது வழக்கம்.

அதன்படி நேற்று முன்தினம் விகனச மகரிஷி ஜெயந்தி உற்சவம் நடத்தப்பட்டது. இதையடுத்து நேற்று மாலை சஹஸ்ர தீப அலங்கார சேவைக்கு பின் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி திருச்சி வாகனத்தில் வடக்கு மாடவீதியில் உள்ள விகனச மகரிஷி சன்னதிக்கு சென்றார். அங்கு மகரிஷிக்கு ஆஸ்தானம் நடத்தி நிவேதனம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரிகள், பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்