தோவாளை முருகன் கோவிலில் மலர் முழுக்கு விழா- நாளை மறுதினம் நடைபெறுகிறது
மலர் முழுக்கு விழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.;
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் தோவாளை அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவிலும் ஒன்று. இந்த ஆலயத்தில் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) 56-வது மலர் முழுக்கு விழா நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு காக்கும் விநாயகர் கோவிலில் அதிகாலையில் கணபதி வேள்வி நடத்தப்பட்டு, அதன்பின்னர் சுப்ரமணிய சுவாமிக்கு திருநீர் முழுக்கு நடத்தப்படுகிறது.
இதையடுத்து காக்கும் விநாயகர் கோவிலில் இருந்து அலங்கார யானை மீது பால்குடம் வைத்து ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. பால்குடங்கள் ஏந்திய பக்தர்களும் ஊர்வலமாக செல்கின்றனர். ஊர்வலத்தை குமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் துவக்கி வைக்கிறார். இந்த ஊர்வலம் கோவிலை அடைந்ததும் சுவாமிக்கு பால், பன்னீர், ஐந்தமுதம், சந்தனம், தேன், இளநீர் முழுக்குகள் நடைபெற உள்ளன. அதன்பின் அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.
இரவு பல்வேறு வகையான மலர்களைக்கொண்டு மலர் முழுக்கு நடத்தப்படுகிறது. மலர் முழுக்கு நிறைவடைந்ததும் நள்ளிரவில் தோகை மயில் முருகப்பெருமானாக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அதன்பின்னர் பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்படுகிறது.