கரூர்: சேமங்கி கமலாம்பிக்கை அம்மன் கோவிலில் குத்து விளக்கு பூஜை
விளக்கு பூஜையை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் மங்கள நாதர் சமேத கமலாம்பிகை புத்தர்களுக்கு காட்சியளித்தார்.;
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே சேமங்கி மாரியம்மன் கோவில் அருகே உள்ள மங்கள நாதர் சமேத கமலாம்பிகை அம்மன் கோவிலில் நேற்று இரவு குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. குத்துவிளக்கு பூஜையை முன்னிட்டு மங்களநாதர் மற்றும் கமலாம்பிகை தாயாருக்கு பால், தயிர் , பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து ஏராளமான வண்ண வளையல்களால் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது.
சேமங்கி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் 1008 குத்து விளக்குகளை கொண்டு வந்து தலை வாழை இலை வைத்து அதில் பூக்கள் மற்றும் குத்து விளக்கை வைத்து தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.
சிறப்பு அலங்காரத்தில் மங்கள நாதர் சமேத கமலாம்பிகை புத்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்ச்சியில் சேமங்கி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.