டிஜிட்டல் பயண அட்டையை ரீசார்ஜ் செய்து பயணிக்கலாம்: சென்னை மெட்ரோ நிறுவனம் தகவல்

கூடுதலாக, பயணிகள் வாகன நிறுத்துமிடங்களிலும் இந்த அட்டையை பயன்படுத்தலாம்;

Update:2025-07-30 00:02 IST

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் டிஜிட்டல் பயண அட்டை வசதியை அறிமுகப்படுத்தியது. பயணிகள் அனைவரும் மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்து, டிஜிட்டல் பயண அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த டிஜிட்டல் பயண அட்டையை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் செல்போன் செயலி மூலம் மட்டுமே வாங்க முடியும்.

ரீசார்ஜ் செய்யப்பட்ட இறுதி நாளிலிருந்து 5 ஆண்டுகள் வரை இந்த அட்டை செல்லுபடியாகும். டிஜிட்டல் பயண அட்டையை பயன்படுத்தி மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு பயணக் கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். இந்த டிஜிட்டல் பயண அட்டையில் குறைந்தபட்சம் ரூ.50 முதல் அதிகபட்சமாக ரூ ஆயிரம் வரை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.கூடுதலாக, பயணிகள் வாகன நிறுத்துமிடங்களிலும் இந்த அட்டையை பயன்படுத்தலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்