மெட்ரோ ரெயில் நிலையங்களில் மெல்லக்கூடிய புகையிலை பொருட்களை பயன்படுத்தினால் அபராதம்

விதிமீறல்களை தீவிரமாக கண்டறிந்து மெட்ரோ ரெயில் பாதுகாப்பு பணியாளர்களுக்கு உடனடியாக தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.;

Update:2025-07-31 00:09 IST

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மெட்ரோ ரெயில்கள் மற்றும் நிலையங்களில் மெல்லும் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதும், அதன் விளைவாக எச்சில் துப்புவதும், குப்பைகள் போடுவதும் அதிகரித்து வருவதாக பயணிகளிடமிருந்து புகார்கள் வந்தது. எனவே, மெல்லக்கூடிய புகையிலைப் பொருட்கள் பயன்பாட்டை தடுக்க நெரிசல் இல்லாத நேரங்கில் கண்காணிப்பு பணியில் ஈடுபட பாதுகாப்பு பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கோயம்பேடில் உள்ள சென்டிரல் பாதுகாப்பு கண்காணிப்பு அறையில் இருந்தவாறு விதிமீறல்களை தீவிரமாக கண்டறிந்து மெட்ரோ ரெயில் பாதுகாப்பு பணியாளர்களுக்கு உடனடியாக தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மெட்ரோ ரெயில் நிலையங்களிலும், ரெயில்களுக்கு உள்ளேயும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தூய்மை மற்றும் நடத்தை விதிமுறைகளை மீறும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். சுத்தமான, பாதுகாப்பான பயண அனுபவத்தை உறுதி செய்வதில் அனைத்து பயணிகளும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்