ராமேசுவரம் மீனவர்கள் 15 பேருக்கு 4-வது முறையாக காவல் நீட்டிப்பு- இலங்கை கோர்ட்டு
15 மீனவர்களும் மீண்டும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்;
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் இருந்து கடந்த ஜூன் 29 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மீன்பிடிக்க சென்ற 15 மீனவர்களை 2 படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்தது. 15 பேரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த மீனவர்கள் ன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது நீதிபதி, 15 மீனவர்களையும் வருகின்ற 14-ந் தேதி வரை சிறையில் அடைக்க காவல்நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து 15 மீனவர்களும் மீண்டும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த 15 மீனவர்களுக்கும் 4-வது முறையாக காவல் நீட்டிப்பு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.