திருச்சி - ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் பகுதியளவு ரத்து

மானாமதுரை - ராமேசுவரம் இடையே ரெயில் சேவை பகுதியளவு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.;

Update:2025-08-01 16:49 IST

திருச்சி,

மதுரை கோட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் பொறியியல் பணிகளை எளிதாக்குவதற்காக ரெயில் சேவைகளின் முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

திருச்சியில் இருந்து காலை 7.05 மணிக்கு ராமேசுவரம் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் பகுதியளவு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இந்த ரெயில் ஆகஸ்ட் 11,12,13,14,18,19,20,21,25,26,28 ஆகிய தேதிகளில் திருச்சியில் இருந்து மானாமதுரை வரை மட்டுமே இயக்கப்படும். மானாமதுரையில் இருந்து ராமேசுவரம் வரை பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

மறுமார்க்கத்தில் ராமேசுவரத்தில் இருந்து மதியம் 3 மணியளவில் திருச்சி புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகஸ்ட் 11,12,13,14,18,,19,20,21,25,26,28, ஆகிய தேதிகளில் மானாமதுரையில் இருந்து மாலை 4.55 மணியளவில் புறப்படும். ராமேசுவரத்தில் இருந்து மானாமதுரைக்கு பகுதியளவு ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்