தென்சென்னை கோட்ட அஞ்சலகங்களில் நாளை பரிவர்த்தனை நடைபெறாது என அறிவிப்பு
சென்னை நகர தெற்கு கோட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.;
சென்னை,
தென்சென்னை அஞ்சல் கோட்ட அஞ்சலகங்கள் நாளை பரிவர்த்தனை நடைபெறாது என அறிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
"அஞ்சல் துறையின் புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் 2.0 சென்னை நகர தெற்கு கோட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் வரும் 4-ந்தேதி முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து 2-ந்தேதி(நாளை) பரிவர்த்தனைகள் நடைபெறாத நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே நாளை தென் சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட 1.ஆழ்வார்திருநகர், 2. ஆதம்பாக்கம், 3. அடையாறு, 4. அசோக் நகர், 5.பெசன்ட் நகர், 6. கிண்டி பொறியியல் கல்லூரி, 7. கிண்டி தொழிற்பேட்டை, 8. ஐஐடி, 9. ஈஞ்சம்பாக்கம், 10. கே.கே.நகர், 11. கோடம்பாக்கம், 12. கோட்டூர்புரம், 13. மடிப்பாக்கம், 14. நந்தம்பாக்கம் குடியிருப்பு, 15. நந்தனம், 16. நங்கநல்லூர், 17. ஒக்கியம் துரைப்பாக்கம், 18. பெருங்குடி, 19. ராஜ்பவன், 20. சைதாப்பேட்டை, 21. சாலிகிராமம், 22. சோழிங்கநல்லூர், 23. செயிண்ட் தாமஸ் மவுண்ட் தலைமை அஞ்சலகம், 24. திருவான்மியூர், 25. டிடிடிஐ தரமணி, 26. வடபழனி, 27. வேளச்சேரி, 28. விருகம்பாக்கம், 29. மேற்கு மாம்பலம், 30. ஆலந்தூர், 31. சென்னை விமான நிலையம், 32. கிண்டி வடக்கு, 33. காரப்பாக்கம், 34. மடிப்பாக்கம் தெற்கு, 35. மாம்பலம் ரயில் நிலையம், 36. மீனம்பாக்கம், 37. நீலாங்கரை, 38. நிலமங்கை நகர், 39. பாலவாக்கம், 40. பழவந்தாங்கல், 41. ராம்நகர், 42. ராமாபுரம், 43. வளசரவாக்கம், 44. ராஜா அண்ணாமலைபுரம், 45. வால்மீகி நகர், 46. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக அஞ்சலகம், 47. நந்தனம் அஞ்சல் வணிக மையம் மற்றும் அதன் விரிவாக்க முனையம் ஆகிய அஞ்சலகங்களில் எந்த ஒரு தபால் சேவையும் மேற்கொள்ளப்படமாட்டாது.
ஆகவே பொதுமக்கள் இந்த சேவை இல்லாத நாளை கணக்கில் கொண்டு, தங்களின் அஞ்சல் சேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டு பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.