தபால் நிலையங்களில் ஆகஸ்டு 2-ந் தேதி சேவைகள் ரத்து

தென் சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட தபால் நிலையங்களில் ஆகஸ்டு 2-ந் தேதி சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளன.;

Update:2025-07-31 00:22 IST

கோப்புப்படம்

சென்னை,

தென் சென்னை கோட்டம் முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தபால் துறையின் புதிய மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பம் 2.0 வருகிற ஆகஸ்டு 4-ந் தேதி முதல் சென்னை நகர தெற்கு கோட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் புதிதாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் சேவையை தடையற்ற மற்றும் பாதுகாப்பான முறையில் செயல்படுத்த ஆகஸ்டு 2-ந் தேதி பரிவர்த்தனைகள் நடைபெறா நாளாக திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, ஆகஸ்டு 2-ந் தேதி தென் சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட தபால் நிலையங்களில் எந்த ஒரு தபால் சேவையும் மேற்கொள்ளப்படாது. எனவே, பொதுமக்கள் இந்த சேவை இல்லாத நாளை கணக்கில் கொண்டு, தங்களின் தபால் சேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டு பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்