எல்.பி.ஜி. சிலிண்டர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிர்வாகத்தினர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்;

Update:2025-07-31 01:15 IST

சென்னை ,

எல்.பி.ஜி. சிலிண்டர்கள் ஏற்றும் லாரிகளுக்கு ஒவ்வொரு பிளாண்ட்டுகளிலும் ஒப்பந்தப்படி போதிய லோடு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.பி.ஜி. சிலிண்டர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிர்வாகத்தினர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற ஒப்புக்கொண்டனர். இதனால் எல்.பி.ஜி. வினியோகம் தடையின்றி சீராக தொடரும் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தலைமை பொது மேலாளர் வெற்றி செல்வகுமார் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்