மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க முடிவு.. மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றம்

மணிப்பூரில் மேலும் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.;

Update:2025-07-31 00:58 IST

புதுடெல்லி,

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் கடந்த பிப்ரவரி 13-ந்தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதற்கு நாடாளுமன்றம் ஏப்ரல் 2-ந்தேதி ஒப்புதல் அளித்தது. இந்த ஒப்புதலுக்கான காலக்கெடு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 13-ந்தேதியுடன் நிறைவடைகிறது. எனவே மேலும் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மக்களவையில் நேற்று உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தார்.

மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தியபின் ஒரேயொருவர் மட்டுமே கொல்லப்பட்டு இருப்பதாகவும், அங்கு முழுமையாக அமைதி திரும்பி இருப்பதாகவும் கூறினார். மேலும் நிரந்தர அமைதியை ஏற்படுத்த இனக்குழுக்கள் இடையே பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் கூறினார்.

பின்னர் இந்த தீர்மானத்துக்கு அவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. முன்னதாக தீர்மானம் மீது விவாதம் நடந்தபோது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே கடும் வார்த்தை மோதல் வெடித்தது. இதனால் மக்களவை ½ மணி நேரம் ஒத்திவைக்க நேரிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்