அரசு பொதுத்தேர்வில் மாற்றம் ஏற்படுமா?.. கல்வித்துறை அளித்த விளக்கம் என்ன..?

மாநிலக் கல்விக்கொள்கை சமச்சீர் கல்வியில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும்? என்று கேள்வி எழுப்பட்டிருந்தது.;

Update:2025-08-14 07:17 IST

கோப்புப்படம்

சென்னை,

மாநில பள்ளிக் கல்விக்கொள்கை 2025-ஐ சமீபத்தில் பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டது. இந்த கல்விக்கொள்கை தொடர்பாக பல்வேறு கருத்துகள், கேள்விகள் முன்வைக்கப்பட்டு வரும் சூழலில், அதுபோன்ற வினாக்களுக்கு பள்ளிக்கல்வித் துறை சார்பில் அதன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்து வருகிறார்.

அதன்படி, நேற்று முன்தினம் மாநிலக் கல்விக்கொள்கை சமச்சீர் கல்வியில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும்? என்று ஆசிரியர் ஒருவர் முன்வைத்த கேள்விக்கு பதில் அளித்து இருந்தார்.

அதன் தொடர்ச்சியாக ஆசிரியை ஒருவர், மாநில கல்விக்கொள்கையால், நம்முடைய பொதுத்தேர்வில் மாற்றம் எதுவும் ஏற்படுமா? என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு, ‘ஆம். போர்டு (வாரிய) தேர்வுகள் மனப்பாடம் முறையில் இருந்து பயன்பாடு அடிப்படையிலும், திறன் அடிப்படையிலும் மாற்றம் பெறும். பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு முன்பு மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் பிளஸ்-1 வகுப்பை தயாரிப்பு ஆண்டாக கருதி, பொதுத்தேர்வை எதிர்கொள்வதற்கும், முன் திறன் வளர்ச்சிக்கும் கவனம் செலுத்தப்படும்' என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்துள்ளார்.

இதுதொடர்பான வீடியோவை அன்பில் மகேஷ் பொய்யாமொழி தன்னுடைய ‘எக்ஸ்' தளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்