தொடர் விடுமுறை: சென்னையில் விமான கட்டணங்கள் உயர்வு
தொடர் விடுமுறையால் சொந்த ஊருக்குச் செல்ல மக்கள் ஆயத்தமாகி வருகிறார்கள்.;
சென்னை,
சுதந்திர தினத்தையொட்டி, வருகிற வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர் விடுமுறை வருகிறது. மேலும் பெருமபாலான ஊர்களில் ஆடி திருவிழா நடைபெறுவதால், பலரும் சொந்த ஊருக்குச் செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள்.
இந்த நிலையில், தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் உள்நாட்டு விமான கட்டணங்கள் பலமடங்கு உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து திருச்சிக்கு சாதாரண நாட்களில் ரூ.1,827ஆக இருந்த விமான கட்டணம் ரூ.14,518 ஆகவும், கோவைக்கு ரூ.3,818ல் இருந்து ரூ.15,546 ஆகவும் உயர்ந்துள்ளது. சென்னை - மதுரை செல்லும் விமான கட்டணம் ரூ.4,000 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.13,000 வரை உயர்ந்துள்ளது.
சென்னையில் இருந்து மதுரை, சேலம், திருச்சி, கோவைக்கு செல்லும் விமான டிக்கெட் கட்டண உயர்வால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.