முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

கொடி ஏற்றும் போது வெடிகுண்டு வெடிக்கும் என காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புக் கொண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.;

Update:2025-08-14 09:09 IST

கோப்புப்படம்

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை (ஆக.15) சுதந்திரத் தினத்தன்று கொடி ஏற்றும் போது வெடிகுண்டு வெடிக்கும் என காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புக் கொண்டு மிரட்டல் விடுத்தார்.

உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீசார், காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட நபரை கைது செய்தனர்.

இதன்படி இந்த சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு மாவட்டம் படாளம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொழிலில் நஷ்டம் அடைந்து விரக்தியில் மது போதையில் கணேசன் மிரட்டல் விடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்