திருவள்ளூர் சிறுமி பாலியல் வழக்கு: கைதான வாலிபருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டுள்ளது;

Update:2025-07-27 00:23 IST

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வடமாநில வாலிபரை 15 தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் சூலூர்பேட்டை ரெயில் நிலையத்தில் வடமாநில வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர். கவரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நபரிடம் விடிய விடிய அவனிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இன்று 2-வது நாளாக அவனிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் சிறுமியிடம் அத்துமீறிய வாலிபர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அசாமை சேர்ந்த ராஜூ பிஸ்வகர்மா என்பது தெரியவந்தது. விசாரணை நடத்தி முடித்த நிலையில் அவனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். திருவள்ளூர் மவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவனை 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டர்.

Tags:    

மேலும் செய்திகள்