பிரதமர் மோடியிடம் மனு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வைத்த முக்கிய கோரிக்கைகள் என்னென்ன..?
மக்களின் உணர்வுகளுக்கும், மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மதிப்பளித்து உரிய தீர்வினைப் பிரதமர் வழங்குவார் என்று மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.;
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 21-ந் தேதியன்று தலை சுற்றல் காரணமாக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டாக்டர்களின் பரிந்துரையின்படி அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டன. இதையடுத்து டாக்டர்களின் ஆலோசனையின்பேரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே அவருக்கு இதயத்தில் அடைப்புகள் ஏதேனும் உள்ளதா என்பதை கண்டறிய ஆஞ்சியோ பரிசோதனையும் செய்யப்பட்டது. ஆஸ்பத்திரியில் இருந்தாலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு பணியை தொடர்ந்து செய்து வருகிறார். தலைமைச் செயலாளர் முருகானந்தத்திடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடியிடம், தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கோரிக்கை மனு அளிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். பின்னர், தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அளிக்கப்பட வேண்டிய கோரிக்கை மனுவிற்கு முதல்-அமைச்சர் ஒப்புதல் அளித்தார். அப்போது கனிமொழி எம்.பி. மற்றும் முதல்-அமைச்சரின் செயலாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
இதனைத்தொடர்ந்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பதிவில், 'ஆஸ்பத்திரியில் இருப்பதால், பிரதமரிடம் வழங்குவதற்கான கோரிக்கைகள் அடங்கிய மனுவை தலைமைச் செயலாளர் மூலமாக கொடுத்து அனுப்பியுள்ளேன். நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அதை பிரதமரிடம் வழங்குவார்' என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்கான நிதி, ஏழை - நடுத்தர மக்களின் போக்குவரத்துக்காக ரெயில் திட்டங்கள், மீனவர்களின் வாழ்வாதாரம், சேலம் பாதுகாப்புத் தொழிற்பூங்கா ஆகியவற்றை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம்.
மக்களின் உணர்வுகளுக்கும் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மதிப்பளித்து உரிய தீர்வினைப் பிரதமர் வழங்குவார் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்து, பிரதமர் மோடியிடம் நேற்று கொடுக்கப்பட்ட கோரிக்கை மனு விபரங்கள்:-