தஞ்சை மணிமாறனுக்கு பிரதமர் மோடி பாராட்டு
தமிழ் ஓலைச்சுவடிகளையும், கலாசாரத்தையும் பாதுகாப்பது, பிரபலப்படுத்துவது என்ற முயற்சியில் மணி மாறன் முன்னணியில் உள்ளார் என்று பிரதமர் மோடி கூறினார்.;
சென்னை,
ஓலைச்சுவடிகளில் பன்னெடுங்காலமாக பாதுகாக்கப்பட்டு வரும் நமது அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். அத்தகைய பணியை செய்து வரும் தஞ்சையை சேர்ந்த மணிமாறனின் பணி பாராட்டுக்குரியது என்று, மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.
மேலும் சிறந்த தமிழ் ஓலைச்சுவடிகளையும், கலாசாரத்தையும் பாதுகாப்பது, பிரபலப்படுத்துவது என்ற குறிப்பிடத்தக்க முயற்சியில் திரு மணி மாறன் முன்னணியில் உள்ளார் என்று குறிப்பிட்டார்.
மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டி பேசியதை கேட்ட மணிமாறன், அவரது குடும்பத்தினர், சக ஊழியர்கள் என பலரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
தஞ்சாவூர், சரஸ்வதி மஹால் நுாலக, தமிழ்பண்டிதர் மணி.மாறன், 55. இவர் தமிழ், வரலாறு, சமஸ்கிருதம், வரலாற்று நோக்கில் தமிழிலக்கியம் காட்டும் நீர் மேலாண்மை என்ற தலைப்பில் பி.ஹெச்.டி பட்டம் பெற்றுள்ளார்.