பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

5000 கனஅடி முதல் 25000 கன அடி வரை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-07-27 14:43 IST

சென்னை,

தமிழக நீர்வளத்துறை வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று 27.07.2025 காலை 8.00 மணியளவில் 99.85 அடியை எட்டியுள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகப்படியாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் இன்று காலை 10.00 மணியளவில் 100 அடியை எட்டும். எனவே அணையிலிருந்து உபரி நீர் பவானி ஆற்றில் 5000 கனஅடி முதல் 25000 கன அடி வரை திறந்துவிடப்படலாம் என்றும், திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

எனவே பவானி ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்புக்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்