திருநெல்வேலியில் 400 போதை மாத்திரைகளுடன் வாலிபர் கைது

மூலக்கரைப்பட்டியில் அரசனார்குளம் பஸ் ஸ்டாப் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.;

Update:2025-07-29 10:49 IST

திருநெல்வேலி மாவட்டம், மூலக்கரைப்பட்டி பகுதியில் போதை மாத்திரைகள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரசனார்குளம் பஸ் ஸ்டாப் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த அம்பலம், மேற்கு தெருவை சேர்ந்த ஜோசப் (வயது 21) என்பவரை போலீசார் சோதனை செய்து பார்த்தனர். அப்போது அவர் மனித உடலுக்கும், உயிருக்கும் கேடு விளைவிக்கக்கூடிய 400 போதை மாத்திரைகளை திருப்பூரில் இருந்து வாங்கி நெல்லைக்கு கொண்டு வந்து அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து மேற்சொன்ன சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ஜோசப்பை நேற்று கைது செய்து, அவரிடமிருந்து மேற்சொன்ன போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்