தவெக உறுப்பினர் சேர்க்கை செயலியை நாளை வெளியிடுகிறார் விஜய்

விஜய் தலைமையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பனையூர் தவெக அலுவலகத்தில் நடைபெற உள்ளது.;

Update:2025-07-29 11:41 IST

சென்னை,

தமிழ்நாட்டின் 2026  சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் கட்சியை தொடங்கி தனது அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். மேலும் கூட்டணி பேச்சுக்கே இடமில்லை என்று கூறி, தனித்து போட்டியிட உள்ளார். மேலும் ஆகஸ்ட் மாதம் தவெக கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது. குறிப்பாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 8 மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், மதுரை மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

முன்னதாக, தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் 2 கோடி உறுப்பினர்களை தமிழக வெற்றி கழகத்தில் சேர்க்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் சுமார் ஒன்றரை கோடிக்கும் அதிகமானவர்கள் கட்சியில் இணைந்தனர். இதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளின் அரசியல் பணி செயல்பாடுகளை கண்காணிக்க தவெக தலைவர் விஜய் தலைமையில் வாட்ஸ்அப் குழு உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தமிழகவெற்றிக்கழகத்தில் இணைய உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய செயலியை தலைவர் விஜய் அறிமுகம் செய்ய உள்ளதாக கடந்த சில தினங்களாக பேசப்பட்டு வந்த நிலையில்,

தவெக உறுப்பினர் சேர்க்கை செயலியை நாளை (ஜூலை 30) வெளியிடுகிறார் அக்கட்சித் தலைவர் விஜய். பனையூர் தலைமை அலுவலகத்தில் நாளை நடைபெறவுள்ள தவெக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் செயலியை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து செயலி அறிமுகம் செய்ததும் உறுப்பினர் சேர்க்கை பணி தொடங்கும் எனதெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்