சென்னை ரெயில்வே கோட்டத்திற்கு புதிய மேலாளராக சைலேந்திர சிங் பொறுப்பேற்பு

சென்னை ரெயில்வே கோட்டத்திற்கு புதிய மேலாளராக சைலேந்திர சிங் பொறுப்பேற்றுக்கொண்டார்.;

Update:2025-07-29 22:14 IST

சென்னை,

இந்திய ரெயில்வேயில் ஒவ்வொரு மண்டலங்களிலும் பணியாற்றும் ரெயில்வே கோட்ட மேலாளர்கள் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடு முழுவதும் 32 ரெயில்வே கோட்ட மேலாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இதில், தெற்கு ரெயில்வேயில் 5 கோட்ட மேலாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். சென்னை ரெயில்வே கோட்டத்தின் மேலாளராக இருந்த விஸ்வநாத் ஈர்யா மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக சைலேந்திர சிங் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்ட மேலாளராக சைலேந்திர சிங் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் கடந்த 1995-ம் ஆண்டு இந்திய ரெயில்வேயில் சிக்னல் என்ஜினீயராக பணியில் சேர்ந்தார். ரெயில்வே நிர்வாகம் மற்றும் தொழில்நுட்பங்களில் மிகுந்த அனுபவம் கொண்டவர்.

இதற்கு முன்பாக செகந்திராபாத் ரெயில்வே கோட்டத்தின் கூடுதல் மேலாளராகவும், ரெயில்டெல் நிறுவனத்தின் பொது மேலாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்