த.வெ.க. உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலி விவரம் வெளியீடு

த.வெ.க. தலைவர் விஜய், இந்த செயலியை நேரடியாக கண்காணிப்பார் என்று தகவல் தெரிவிக்கின்றது.;

Update:2025-07-30 08:43 IST

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதனை சந்திக்க த.வெ.க. தீவிரமாக இறங்கி உள்ளது. த.வெ.க. சார்பாக 'மக்கள் விரும்பும் முதல்-அமைச்சர் வேட்பாளர்' என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் கட்டமைப்பு பணிகளை பலப்படுத்தும் பணியில் விஜய் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் கட்சிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை விரைவுப்படுத்த புதிய செயலி ஒன்றை இன்று விஜய் அறிமுகப்படுத்துகிறார்.

இதற்கான நிகழ்ச்சி பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் நடக்கிறது. பகல் 11 மணிக்கு நடக்கும் இந்த நிகழ்வில் விஜய் பங்கேற்கிறார். கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்க உள்ளனர். தொடர்ந்து, மாவட்ட செயலாளர்களுடன் விஜய் ஆலோசனை நடத்த உள்ளார். மாநாடு, மக்கள் சந்திப்பு மற்றும் சுற்றுப்பயணம் குறித்து நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசிக்கிறார்.

இந்த சூழலில் மதுரையில் வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி தவெகவின் 2-வது மாநில மாநாடு நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கட்சிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலி பற்றிய விவரம் இன்று வெளிவந்து உள்ளது.

இதன்படி, கட்சியில் உறுப்பினர் சேர்க்கைக்கு புகைப்படம் எடுத்து, தொலைபேசி எண்ணை செயலியில் பதிவிட வேண்டும். ஓ.டி.பி. கேட்காத வகையில், அது வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று, ஒரு பூத்தில் எத்தனை வீடுகள் உள்ளன, எவ்வளவு வாக்காளர்கள் உள்ளனர் என்பன போன்ற தகவல்களும் செயலியில் இடம் பெற்றுள்ளன. இந்த செயலியை த.வெ.க. தலைவர் விஜய் நேரடியாக கண்காணிப்பார் என்றும் தகவல் தெரிவிக்கின்றது.

Tags:    

மேலும் செய்திகள்