மாதாந்திர பராமரிப்பு பணி: திருச்செந்தூரில் இன்று மின்தடை
திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட உபமின் நிலையத்தில் இன்று மின்வாரிய மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.;
தூத்துக்குடி மின்பகிர்மான வட்டம், திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட உபமின் நிலையத்தில் பின்வரும் பகுதிகளில் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று (30.07.2025, புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆலந்தலை, கல்லாமொழி, கந்தசாமிபுரம், கணேசபுரம், சுனாமிநகர், சூசைநகர், குலசேகரன்பட்டினம், மணப்பாடு, சிறுநாடார்குடியிருப்பு, நா.முத்தையாபுரம், மறவன்விளை, நாலுமூலைக்கிணறு ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.