குற்றாலத்தில் குரங்கு பறித்து சென்ற சாவியை நூதன முறையில் மீட்ட போலீஸ்காரர்

கார் சாவியை கால் விரலில் மாட்டிக் கொண்டவாறு குரங்கு தின்பண்டங்களை ஒவ்வொன்றாக ருசித்தது.;

Update:2025-07-30 09:12 IST

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் குரங்குகள் அதிகளவில் உள்ளன. சுற்றுலா பயணிகளிடம் உள்ள தின்பண்டங்களை நைசாக பறித்து செல்லும் குரங்குகளும் உண்டு. நேற்று மெயின் அருவியில் குளிக்க சென்ற சுற்றுலா பயணியிடம் இருந்த கார் சாவியை நைசாக குரங்கு பறித்து கொண்டு பாறையில் ஏறி நின்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர், அங்கு இருந்த போலீஸ்காரர் பாலமுருகனிடம் தெரிவித்தார்.

உடனே போலீஸ்காரர் அந்த பாறையில் சற்று தூரம் ஏறி நின்று, குரங்குக்கு பிடித்த அன்னாசி பழம், வடை போன்றவற்றை ஒவ்வொன்றாக கொடுத்தார். கார் சாவியை கால் விரலில் மாட்டிக் கொண்டவாறு குரங்கு தின்பண்டங்களை ஒவ்வொன்றாக ருசித்தது. இறுதியில் கொய்யாப்பழத்தை குரங்குக்கு கொடுத்ததும் கால் விரலில் மாட்டியிருந்த சாவியை கீழே போட்டது. தொடர்ந்து கொய்யாப்பழத்தை ருசித்தவாறு குரங்கு அங்கிருந்து சென்றது.

நீண்டநேர போராட்டத்துக்கு பிறகு சுற்றுலா பயணிக்கு கார் சாவி திரும்ப கிடைத்ததால் நிம்மதியடைந்தார். குரங்கிடம் இருந்த சாவியை நூதன முறையில் மீட்டு கொடுத்த போலீஸ்காரர் பாலமுருகனுக்கு நன்றி தெரிவித்து புறப்பட்டு சென்றார். இது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்