1-ந் தேதி முதல் சமையல் எரிவாயு டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம்

போக்குவரத்து ஒழுங்கு முறையில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொண்டுள்ளதால் அபராதம் விதிக்கப்படுகிறது.;

Update:2025-07-29 22:28 IST

சென்னை,

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் நிரப்பும் இடங்கள் தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 12 இடங்களில் உள்ளன. இங்கு லோடு ஏற்றி செல்லும் லாரிகளுக்கு ஒப்பந்தப்படி லோடு கொடுப்பது இல்லை என கூறப்படுகிறது. மேலும் போக்குவரத்து ஒழுங்கு முறையில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொண்டுள்ளதால் அபராதம் விதிக்கப்படுகிறது.

எனவே தமிழ்நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நிறுவன பணி இடங்களில் இருந்து இயங்கும் சிலிண்டர் லாரிகள் வருகிற 1-ந் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாதால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என தமிழ்நாடு எரிவாயி சிலிண்டர் லாரிகள் உரிமையாளர் சங்க தலைவர் செந்தில் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்