தி.மு.க. தேர்தல் வாக்குறுதியின்படி பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்க; ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

தமிழக அரசு பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்கினால் 30 ஆயிரம் ரூபாய் அளவில் சம்பளம் கிடைக்கும்.;

Update:2025-07-29 21:36 IST

கோப்புப்படம்

சென்னை,

தமிழக அரசு பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை பாடங்களை கற்பிக்கும் பகுதிநேர ஆசிரியர்கள் தங்களுக்கு தற்போது வழங்கப்படுகின்ற 12,500 ரூபாய் தொகுப்பூதியத்தை மாற்றி காலமுறை சம்பளம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வலியுறுத்தி வருகின்றார்கள்.

இந்த கோரிக்கை தி.மு.க. தேர்தலில் 181வது வாக்குறுதியாக முதல்வர் அறிவித்து இருந்ததால் அரசாணையாக்கி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என 12 ஆயிரம் குடும்பங்கள் காத்துள்ளார்கள்.

தற்போது மாதம் 12,500 ரூபாய் சம்பளம் வழங்க ரூ.15 கோடி என ஆண்டுக்கு ரூ.165 கோடி ஆகிறது. காலமுறை சம்பளம் வழங்கினால் 30 ஆயிரம் ரூபாய் அளவில் சம்பளம் கிடைக்கும். அதற்காக மாதம் ஒன்றுக்கு மேலும் ரூ.20 கோடி என ஆண்டுக்கு ரூ.240 கோடி அளவில் தேவைப்படும்.

இதற்கு முதல்வர் ஸ்டாலின் மனது வைத்தால் போதும். இந்த 15 ஆண்டு தற்காலிக வேலை முடிவுக்கு வந்து விடும். இதே உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை பாடங்களில் காலமுறை சம்பளத்தில் பணிபுரியும் சிறப்பாசிரியர்களுக்கு உரிய அனைத்தும் கிடைத்து விடும்.

இதற்கு அரசு கொள்கை முடிவு எடுத்து பணி நிரந்தரம் செய்து அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சி. செந்தில்குமார் வலியுறுத்தி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்