மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் ஆணவப் படுகொலைகள் அதிகமாக நடைபெறுகிறது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தவறு செய்தவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்;

Update:2025-07-29 22:37 IST

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

மு.க.ஸ்டாலின் தலைமையிலான Failure மாடல் ஆட்சியில் ஆணவப் படுகொலைகள் அதிகமாக நடைபெறுகிறது , ஜாதி மோதல்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கவின் என்ற மென்பொறியாளர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.

இதனால் அந்த பகுதியில் பெரும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதாகவும், ஸ்டாலின் மாடல் காவல்துறை ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகவும் அறிந்து, Failure Model அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உடனடியாக பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைத்திடவும், தவறு செய்தவர்கள் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விடியா மாடல் அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.என தெரிவித்துள்ளார் . 

Tags:    

மேலும் செய்திகள்