தென்காசி: குளத்தில் மூழ்கி விவசாயி பலி
நாகல்குளம் ஊரின் அருகேயுள்ள குளத்தில் ஆண் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.;
பாவூர்சத்திரம் அருகே நாகல்குளம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன் என்ற காளை (வயது 48). விவசாயியான இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து புறப்பட்டு வெளியே சென்றவர் திரும்பி வராமல் மாயமானார். இதுகுறித்த புகாரின்பேரில், பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நாகல்குளம் ஊரின் அருகேயுள்ள குளத்தில் ஆண் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்ற போலீசார் குளத்தில் பிணமாக மிதந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் குளத்தில் பிணமாக மிதந்தவர் வேல்முருகன் என்பதும், அவர் குளத்தில் கை, கால் கழுவ சென்றபோது தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.