தூத்துக்குடியில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடியில் கல்லூரி மாணவி ஒருவர் செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது, அவரது தங்கை நான் படிக்க வேண்டும்; இங்கே உட்கார்ந்து பேசாதே என்று கண்டித்துவிட்டு வெளியே சென்றுள்ளார்.;

Update:2025-07-29 14:18 IST

தூத்துக்குடி புதிய துறைமுகம், தெர்மல்நகர், லேபர் காலனியைச் சேர்ந்த அரிச்சந்திரன் மகள் தர்ஷினி (வயது 18), கல்லூரி மாணவி. இவர் இன்று காலை செல்போனில் பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது அவரது தங்கை நான் படிக்க வேண்டியிருக்கிறது. இங்கே உட்கார்ந்து பேசாதே என்று கண்டித்துவிட்டு வெளியே சென்றுள்ளார்.

சிறிது நேரத்திற்கு பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது தர்ஷினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து தெர்மல்நகர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்