வீட்டில் தனியாக இருந்த 16 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்.. வடமாநில வாலிபர் கைது
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு இது பற்றி போலீசுக்கு தெரிவித்தனர்.;
சென்னை,
சென்னை சூளைமேடு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தேனீக்கள் கூடு கட்டி இருந்தன. அதனை அகற்றுவதற்காக வடமாநில வாலிபர் ஒருவரை அழைத்துச் சென்றுள்ளனர். தேன் கூடுகளை அகற்றுவதற்காக சென்ற அந்த நபர், அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக இருந்த 16 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி கூச்சல் போட்டுள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு இது பற்றி போலீசுக்கு தெரிவித்தனர். பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபரையும் மடக்கி பிடித்து அண்ணா நகர் மகளிர் போலீஸ் நிலை யத்தில் ஒப்படைத்தனர். போக்சோ வழக்கில் அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.