பாளையங்கோட்டையில் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

வங்கி ஊழியர், கலெக்டர் அலுவலக நில அளவையர் தம்பதியரின் மகன் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.;

Update:2025-07-29 12:54 IST

நெல்லை மாநகர், பாளையங்கோட்டை, ரகுமத்நகர் 60 அடி சாலையைச் சேர்ந்த முத்துக்குமார், வங்கி ஊழியர். இவருடைய மனைவி ராஜேசுவரி, நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நில அளவையராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுடைய மகன் ஹரிஷ்குமார் (வயது 17), பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

நேற்று முன்தினம் ஹரிஷ்குமார் வீட்டில் தனது அறையில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் அங்கு சென்று ஹரிஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், அவர் மனஉளைச்சலில் தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரியவந்தது. எனினும் தற்கொலைக்கு வேறு காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிளஸ்-2 மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்