நெல்லையில் இரு தரப்பினர் இடையே மோதல் - போலீசார் துப்பாக்கி சூடு

இந்த மோதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-07-29 07:27 IST

நெல்லை மாவட்டம் பாப்பாகுடியில் நேற்று நள்ளிரவு இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்தது. இது குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து சென்றனர்.

மேலும், மோதலை தடுக்க முற்பட்டனர். அப்போது, போலீசாரை இளைஞர் அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். இதனால், தற்காப்பிற்காக போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் இளைஞர் காயமடைந்துள்ளார்.

இதையடுத்து, பாப்பாகுடி பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், போலீசார் சுட்டதில் காயமடைந்த நபர் நெல்லை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மோதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்