''என் ஸ்டேட்டஸ் வேற அவர் ஸ்டேட்டஸ் வேற..'' எடப்பாடியை சாடிய அமைச்சர் துரைமுருகன்

வேலூரில் 7 புதிய குளிர்சாதன பஸ்களின் சேவையை அமைச்சர் துரைமுருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.;

Update:2025-07-27 09:55 IST

வேலூர்,

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் ரூ.3 கோடியே 43 லட்சம் மதிப்பில் 7 புதிய குளிர்சாதன பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு 7 புதிய குளிர்சாதன பஸ்களின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:-

கேள்வி: பீகார் மாநிலத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். இந்த விஷயத்தில் தேர்தல் கமிஷன் சரியாக செயல்படுகிறதா?.

பதில்: தேர்தல் கமிஷன் மீது தான் தற்போது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. ஆகவே சரியாக செயல்படவில்லை என்று தான் அர்த்தம்.

மிகப்பெரிய எழுச்சி, புரட்சி

கேள்வி: தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறதே?.

பதில்: இதை எதிர்த்து தான் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

கேள்வி: இந்தியா முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் செய்ய உள்ளதாக மத்திய அரசு அறிவித்தது பற்றி...

பதில்: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் காரணமாக மிகப்பெரிய புரட்சி மற்றும் எழுச்சி, நாடு முழுவதும் உருவாகும்.

பதில் சொல்ல முடியாது...

கேள்வி: ''உள்துறை மந்திரி அமித்ஷாவை நான் சந்தித்தால் தவறு. முதல்-அமைச்சரும், அவருடைய மகனும் யார் வீட்டு கதவை தட்டினார்கள்'' என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு உங்களின் பதில் என்ன?.

பதில்: இவ்வளவு கீழ்த்தரமான கேள்விகளுக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது. அவர்கள் ஸ்டேட்டஸ் வேறு. என்னுடைய ஸ்டேட்டஸ் வேறு.

தி.மு.க. ஆட்சியின் குறைகள் குறித்து பொதுமக்களிடம் அ.தி.மு.க.வினர் துண்டு பிரசுரங்கள் வழங்கி வருகிறார்களே? என்ற கேள்விக்கு, 'கொடுக்கட்டும்' என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்