திருச்செந்தூர் கடலில் புனித நீராடியபோது ராட்சத அலையில் சிக்கி பெண் பக்தர் கால் முறிந்தது

கடலில் திடீரென்று எழுந்த ராட்சத அலை ராஜாமணியை புரட்டி போட்டு கடலுக்குள் இழுத்து சென்றது.;

Update:2025-07-27 09:50 IST

திருச்செந்தூர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கடலில் இறங்கி உற்சாகமாக குளிக்கவும் விரும்புகின்றனர். விடுமுறை தினமான நேற்று காலை முதலே கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கடலில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அரியப்பம்பாளையத்தை சேர்ந்த சீனிவாசன் மனைவி ராஜாமணி (வயது 45) என்பவர் உறவினர்களுடன் கோவிலுக்கு வந்துள்ளார்.ராஜாமணி கடலில் இறங்கி புனித நீராடினார். அப்போது திடீரென்று எழுந்த ராட்சத அலை ராஜாமணியை புரட்டி போட்டு கடலுக்குள் இழுத்து சென்றது.

உடனே அருகிலிருந்தவர்கள் ராஜாமணியை பத்திரமாக மீட்டனர். ஆனால், அலை புரட்டி போட்டதால் கடலுக்குள் இருந்த பாறையில் அவரது வலது கால் மோதியதால் எலும்பு முறிவு ஏற்பட்டது.

அப்போது பணியில் இருந்த திருச்செந்தூர் கடலோர பாதுகாப்பு போலீசார் சித்ரா தேவி, அந்தோணி சதீஷ் ஆகியோர் காயமடைந்த ராஜாமணியை மீட்டு கோவில் ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்