'உள்ளம் தேடி இல்லம் நாடி' - பிரசார சுற்றுப் பயணத்தை தொடங்கினார் பிரேமலதா
பிரசார சுற்றுப் பயணத்தை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தொடங்கினார்.;
திருவள்ளூர்,
தேமுதிகவும் தனது கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தின் கும்மிடிப்பூண்டி தொகுதியிலிருந்து தனது சுற்றுப் பயணத்தை பிரேமலதா தொடங்கி உள்ளார்.
தொடர்ந்து ஆகஸ்ட் 4ல் ஆவடி, ஆகஸ்ட் 5ல் காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை, ஆகஸ்ட் 6ல் வேலூர், ஆகஸ்ட் 7ல் திருப்பத்தூர், ஆகஸ்ட் 8ல் ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி, ஆகஸ்ட் 9ல் தருமபுரி, ஆகஸ்ட் 11ல் சேலம், ஆகஸ்ட் 13ல் கள்ளக்குறிச்சி, ஆகஸ்ட் 14ல் நாமக்கல், ஆகஸ்ட் 16ல் கரூர், ஆகஸ்ட் 17ல் பெரம்பலூர், ஆகஸ்ட் 18ல் அரியலூர், ஆகஸ்ட் 19ல் மயிலாடுதுறை, ஆகஸ்ட் 20ல் கடலூர் மற்றும் ஆகஸ்ட் 22ல் விழுப்புரம் பகுதிகளில் பிரசார பயணத்தை மேற்கொள்கிறார்.
ஆகஸ்ட் 23 அன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்கட்ட சுற்றுப் பயணத்தை நிறைவு செய்கிறார். அதன்படி, தேமுதிக சார்பில் ''உள்ளம் தேடி இல்லம் நாடி' என்ற பெயரில் பிரசார சுற்றுப் பயணத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தொடங்கினார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவுடன் விஜய பிரபாகரனும் பிரசாரப் பயணத்தில் பங்கேற்றுள்ளார்.