எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், தமிழிசை சவுந்தரராஜன், பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.;

Update:2025-08-03 21:23 IST

கோப்புப்படம் 

திருநெல்வேலியில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் ஆகியோர் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கடம்பூர் ராஜு விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மேலும் தமிழிசை சவுந்தரராஜன், பொன் ராதாகிருஷ்ணன், ராம சீனிவாசன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். தேர்தல் யுக்திகள், பரப்புரை வியூகம் குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்