தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை-ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரெயில்

பயணிகளின் வசதிக்காக கோவை-ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.;

Update:2025-08-03 23:31 IST

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக கோவை-ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.அதன்படி, கோவையில் இருந்து வருகிற 7, 14, 21, 28 மற்றும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 4 ஆகிய தேதிகளில் ஜெய்ப்பூருக்கு வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-06181) இயக்கப்படுகிறது. அதே போல, ஜெய்ப்பூரில் இருந்து கோவைக்கு 10, 17, 24, 31 மற்றும் அடுத்த மாதம் 7 ஆகிய தேதிகளில் வாராந்திர சிறப்பு ரெயில் (06182) இயக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்