த.வெ.க.வில் 20 ஆயிரம் வாக்குச்சாவடி முகவர்களுக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை பயிற்சி

வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.;

Update:2025-08-04 04:39 IST

சென்னை,

தமிழக வெற்றிக்கழகத்தில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த 'மை டி.வி.கே.' என்ற செயலியை அக்கட்சியின் தலைவர் விஜய் கடந்த 30-ந்தேதி அறிமுகப்படுத்தினார். இந்த செயலி மூலமாக, 'வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு' என்ற தலைப்பில் ஊருக்கு, ஊர், வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு உறுப்பினர் சேர்க்கை செய்வது தொடர்பாக மாவட்ட செயலாளர்கள், தகவல்தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக விஜய் உத்தரவுப்படி, செயலியை பயன்படுத்துவது தொடர்பாகவும், அதன்மூலமாக உறுப்பினர்களை தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ப்பது தொடர்பாகவும் மாவட்ட செயலாளர்களும், பயிற்சி பெற்ற தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளும் அவர்களுக்குரிய மாவட்டங்களை உள்ளடக்கிய வாக்குச்சாவடி முகவர்களுக்கும், உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகளுக்கும் பயிற்சி வழங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி முதற்கட்டமாக சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர், வேளச்சேரி, காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சீபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் உள்பட தமிழகம் முழுவதும் 54 சட்டமன்ற தொகுதிகளில் இருக்கும் 15 ஆயிரத்து 652 வாக்குச்சாவடிகளை சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

சென்னை மயிலாப்பூர், வேளச்சேரி தொகுதியை சேர்ந்த த.வெ.க. வாக்குச்சாவடி முகவர்கள், உறுப்பினர் சேர்க்கை நிர்வாகிகளுக்கு தரமணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பயிற்சி முகாம் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்