இன்ஸ்டா காதல்.. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன்

சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-08-04 07:15 IST

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறான். இவன் திருப்பூரை சேர்ந்த 15 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராமில் பழகி வந்தான். நாளடைவில் அது காதலாக மாறியது. இதையடுத்து அந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து கே.வி.ஆர். நகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் 16 வயது சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்