ஹூப்ளி- ராமநாதபுரம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கம்
இந்த ரெயில் சேலத்தில் இருந்து இரவு 7.50 மணிக்கு வந்து இரவு 7.55 மணிக்கு புறப்பட்டு செல்லும்.;
சேலம்,
ஹூப்ளி-ராமநாதபுரம் இடையே சனிக்கிழமை தோறும் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி 9-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் இயக்கப்படும் இந்த வாராந்திர ரெயில் (வண்டி எண்-07355) ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் காலை 6.50 மணிக்கு கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் புறப்பட்டு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு ராமநாதபுரம் சென்றடையும்.
இந்த ரெயில் சேலத்தில் இருந்து இரவு 7.50 மணிக்கு வந்து இரவு 7.55 மணிக்கு புறப்பட்டு செல்லும். மறுமார்க்கத்தில் (வண்டி எண்-07356) வருகிற 10-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தோறும் இயக்கப்படும். அதன்படி (வண்டி எண்-07356) ராமநாதபுரத்தில் இரவு 10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 7.40 மணிக்கு ஹூப்ளி ரெயில் நிலையம் சென்றடையும். இந்த ரெயில் சேலத்திற்கு காலை 5.45 மணிக்கு வந்து காலை 5.50 மணிக்கு புறப்பட்டு செல்லும். இந்த தகவலை ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.