தூத்துக்குடி புதிய முனையத்தில் இருந்து விமான சேவை தொடங்கியது

தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி கடந்த 26-ந்தேதி தொடங்கி வைத்தார்.;

Update:2025-08-04 06:49 IST

தூத்துக்குடி,

தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.452 கோடி செலவில் விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்றது. இந்த விமான நிலையத்தில் 3 ஆயிரத்து 115 மீட்டர் நீளம் கொண்ட விமான ஓடுதளம், இரவு நேரத்தில் விமானம் தரையிறங்குவதற்கான வசதிகள், ஒரே நேரத்தில் ஐந்து ஏ321 ரக விமானங்களை நிறுத்தி வைக்கக்கூடிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

இந்த புதிய முனையத்தை பிரதமர் நரேந்திரமோடி கடந்த 26-ந்தேதி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து புதிய முனையத்தில் இருந்து விமானங்களை இயக்குவது, பயணிகள் முனைய செயல்பாடுகளை மேற்கொள்வதற்கான பணிகள் நடந்து வந்தன.

இந்த பணிகள் அனைத்தும் நேற்று முன்தினம் நிறைவடைந்த நிலையில் விமான நிலையத்தின் புதிய முனையத்தில் இருந்து நேற்று முதல் விமான சேவை தொடங்கியது. 

Tags:    

மேலும் செய்திகள்