பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை - போக்சோவில் கைதான ஆங்கில ஆசிரியர்
குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் வந்து ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர்.;
தேனி மாவட்டம், ராஜதானி பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 38). இவர் ஒரு தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் அந்தப் பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் ஒரு மாணவிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து மாணவி பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தார்.
மேலும் தகவல் அறிந்த குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் வந்து ஆசிரியர் ரஞ்சித்குமாரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆசிரியர் ரஞ்சித்குமார் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து குழந்தைகள் நல பாதுகாப்பு மேற்பார்வையாளர் சந்திரா ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் ரஞ்சித்குமார் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்