அடிமைத்தனம் பற்றி எடப்பாடி பழனிசாமி பேசலாமா? : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல்
சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.;
சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
கம்யூனிஸ்டுகள் மீது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு திடீர் பாசம் வந்துள்ளது. கம்யூனிஸ்டுகள் திமுகவுக்கு அடிமையாக இருபதாக அவர் கூறுகிறார்.
நாட்டில் யார் யார் எதைப்பேசவெண்டும் என்பதே இல்லை. அடிமைத்தனம் பற்றி எடப்பாடி பழனிசாமி பேசலாமா? இங்கே யாருக்கும் யாரும் அடிமையில்லை. கம்யூனிஸ்டுகள் குறைகளை சுட்டிக்காட்ட தவறியதுமில்லை. அதை நாங்கள் ஒருபோதும் புறக்கணித்ததுமில்லை. எது தோழமை சுட்டுவது, எது அவதூறாக பேசுவது என்பது எங்களுக்கு தெரியும். திமுக, கம்யூனிஸ்டுகள் கூட்டணி என்பது தேர்தல் கூட்டணி அல்ல கொள்கை கூட்டணி
இவ்வாறு அவர் பேசினார்.