சபாநாயகர் அப்பாவு கார் முற்றுகை: நெல்லையில் பரபரப்பு
காலி குடங்களுடன் மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு காரை மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரூ.423 கோடி மதிப்பீட்டில், 12,000 வீடுகளுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைக்க திசையன்விளைக்கு சபாநாயகர் அப்பாவு வருகை தந்தார்.
அப்போது அப்பாவு காரை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.முறையாக குடிநீர் வழங்கவில்லை என காலி குடங்களுடன் திசையன்விளை பேரூராட்சி தலைவர் ஜான்சிராணி தலைமையில் மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.