கவர்னர் தேநீர் விருந்து - தவெக கட்சிக்கு அழைப்பு

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு கவர்னர் மாளிகை அழைப்பு விடுத்துள்ளது.;

Update:2025-08-13 17:03 IST

சுதந்திர தினத்தையொட்டி கிண்டி கவர்னர் மாளிகையில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு கவர்னர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். இதில் கலந்து கொள்ள கவர்னர் மாளிகை சார்பில் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும். அவ்வாறு ஒவ்வொரு கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக கடந்த ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு கவர்னர் மாளிகை அழைப்பு விடுத்தது. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி என்ற அடிப்படையில் அழைப்பு விடுக்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை தெரிவித்திருந்தது. இருப்பினும் கடந்த முறை விஜய் இந்த விருந்தில் கலந்து கொள்ள வில்லை.

இந்த நிலையில் சுந்திர தினத்தை முன்னிட்டு, தற்போது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு கவர்னர் மாளிகை அழைப்பு விடுத்துள்ளது. இதனிடையே காங்கிரஸ், சிபிஎம், விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் கவர்னர் தேநீர் விருந்து நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்