பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை
திருநெல்வேலியில் விஜயாபதி துணைமின் நிலையத்தில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.;
வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விஜயாபதி துணைமின் நிலையத்தில் நாளை (14.8.2025, வியாழக்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையத்தில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே கீழ்கண்ட ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது.
அதன்படி கூத்தன்குழி, முருகானந்தபுரம், உதயத்தூர், சிதம்பரபுரம், பரமேஸ்வரபுரம், இளையநயினார்குளம் ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.