ஜனநாயகக் குரல்வளையை நெரிக்கும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் கண்டனம்

ஜனநாயகக் குரல்வளையை நெரிக்கும் திமுக அரசுக்கு கூடிய விரைவில் முடிவு கட்டப்படும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.;

Update:2025-08-13 19:55 IST

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

திமுக-வின் தேர்தல் வாக்குறுதி எண் 285-ன் படி பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சென்னையில் கடந்த 12 நாட்களாக போராடி வரும் தூய்மை பணியாளர்களை இன்று மாலை சந்திக்கவிருந்த தமிழக பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் கவர்னருமான சகோதரி தமிழிசை அவர்களை வீட்டிலேயே தடுத்து நிறுத்த முயன்ற திமுக அரசின் அடக்குமுறை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பொதுமக்களின் நலனுக்காகப் போராடும் அரசியல் கட்சி தலைவர்களை திமுக அரசு ஒடுக்க நினைப்பது ஜனநாயகப் படுகொலை.

தூய்மைப் பணியாளர்களின் துயரங்களுக்கு செவிமடுக்காத திமுக அரசுக்கு, அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவோர்களைத் தடுப்பதற்கு மட்டும் என்ன உரிமை இருக்கிறது? தமிழகத்தில் தங்களின் உரிமைகளைக் கேட்டு போராடுபவர்களையும் அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களையும் கைது செய்து, ஜனநாயகக் குரல்வளையை நெரிக்கும் விடியா அரசுக்கு கூடிய விரைவில் முடிவு கட்டப்படும். என தெரிவித்துள்ளார் . 

Tags:    

மேலும் செய்திகள்