பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மீது வழக்குப்பதிவு
தமிழிசை சவுந்தரராஜன் தூய்மை பணியாளர்களை சந்தித்தார்.;
சென்னை மாநகராட்சி மண்டலம் 5,6 ஆகியவற்றில் தூய்மை பணி தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூய்மை பணியாளர்கள் கடந்த 1ம் தேதி முதல் ரிப்பன் கட்டிடம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூய்மை பணியாளர்களுடன் அரசு நடத்திஹ்ய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நாத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
மேலும், தூய்மை பணியாளர்களை ரிப்பன் கட்டிட பகுதியில் இருந்து அப்புறப்படுத்த காவல்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனால், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தூய்மை பணியாளர்கள் இன்று இரவுக்குள் ரிப்பன் கட்டிட பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தூய்மை பணியாளர்களை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று மாலை சந்தித்தார். தடையை மீறி போராட்டம் நடைபெறும் ரிப்பன் மாளிகை கட்டிடம் அமைந்துள்ள பகுதிக்கு சென்ற தமிழிசை சவுந்தரராஜன் தூய்மை பணியாளர்களை சந்தித்தார்.
இதையடுத்து, தமிழிசை சவுந்தரராஜன் மீது பெரியமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோர்ட்டு உத்தரவை மீறி தூய்மை பணியாளர்களை சந்தித்ததாக தமிழிசை சவுந்தரராஜன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.